அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை 
தமிழ்நாடு

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.

DIN

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.

ஆண்டுதோறும் அண்ணா நினைவு நாளன்று, வாலஜா சாலையிலிருந்து அண்ணா நினைவிடத்திற்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களுடன் பேரணியாக சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்.

ஆனால், கரோனா காரணமாக இந்தாண்டு பேரணி ரத்து செய்யப்பட்டு நேரடியாக மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கரோனா பரவல் காரணமாக அண்ணா நினைவு நாளையொட்டி கோயில்களில் நடைபெறும் அன்னதான நிகழ்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT