பிப்-5-ல் பிரதமர் மோடி ஐதராபாத் பயணம்
பிரதமர் மோடி பிப்ரவரி 5-ஆம் தேதி ஹைதராபாத் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாடுபிப்-5-ல் பிரதமர் மோடி ஐதராபாத் பயணம்
பிரதமர் மோடி பிப்ரவரி 5-ஆம் தேதி ஹைதராபாத் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி பிப்ரவரி 5-ஆம் தேதி ஹைதராபாத் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பின்னர் பிற்பகல் 2.45 மணியளவில் ஹைதராபாத் பத்தன்செருவில் உள்ள சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவன வளாகத்திற்கு (இக்ரிசாட்) பிரதமர் செல்கிறார். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
இதன்பின்னர் மாலை 5 மணியளவில் ஹைதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை(சமத்துவச் சிலை) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில், ராமானுஜர் போதனைகள். வாழ்க்கைப் பயணம் ஆகியவை குறித்த முப்பரிமாண காட்சி இடம் பெறும்.
சமத்துவச் சிலையை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள 108 திவ்யதேசங்களின் அடையாள அமைப்புகளை பிரதமர் பார்வையிடுவார். 5 உலோகங்களைக் கொண்ட பஞ்சலோகத்தால் தயாரிக்கப்பட்ட ராமானுஜர் சிலை உலகில் அமர்ந்த நிலையில் உள்ள உயரமான உலோகச் சிலைகளில் ஒன்றாகும்.