தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கு கீழ் கரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 11,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 11,993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 1,751 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 1,426 பேரும், செங்கல்பட்டில் 1,097 பேரும், திருப்பூரில் 1,017 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மற்றொருபுறம் மேலும் 23,084 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு இன்று வீடு திரும்பியுள்ளனா்.
இதையும் படிக்க- கல்வி உரிமையை நீட் தேர்வு பறிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 82,778-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 66,878 போ் உள்ளதாக சுகாதாரத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 30 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,666-ஆக அதிகரித்துள்ளது.