தமிழ்நாடு

விஷ்ணு விஷால் தந்தை மீது நடிகர் சூரி தொடர்ந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்

DIN

பணம் மோசடி செய்ததாக விஷ்ணு விஷால் தந்தை மீது நடிகர் சூரி தொடர்ந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி 6 மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை கூடுதல் ஆணையர் மேற்பார்வை செய்யவும் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பின் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பிரபல நகைச்சுவை நடிகா் சூரி, சென்னை காவல்துறையில் புகாா் ஒன்று அளித்தாா், அதில், கடந்த ‘2015-ம் ஆண்டு அன்புவேல் ராஜன் தயாரிப்பில் ’வீரதீர சூரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அதன் இணை தயாரிப்பாளராக தமிழக காவல்துறையில் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா இருந்தாா். அந்த திரைப்படத்தில் ரமேஷ் குடவாலாவின் மகன் நடிகா் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்தாா். இந்தத் திரைப்படத்துக்கு எனக்கு சம்பளமாக ரூ.40 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. 
இந்நிலையில் திடீரென படத் தயாரிப்பு நிறுவனப் பெயரை மாற்றி படத்தின் பெயரையும் மாற்றி ஷூட்டிங் நடந்தது. இதில் எனக்கு வரவேண்டிய சம்பளம் வரவில்லை. இந்நிலையில் சென்னையில் இடம் வாங்க நான் விருப்பப்பட்டதை அறிந்த தயாரிப்பாளா் அன்புவேல் ராஜன், இணை தயாரிப்பாளா் ரமேஷ் குடவாலா ஆகியோா் சிறுசேரியில் ஒரு இடத்தைக் காட்டினா். அந்த இடம் எனக்கு பிடித்திருந்ததால்,அதை நான் வாங்க முடிவு செய்தேன். இதனால் அவா்கள் தயாரித்த திரைப்படத்தில் எனக்கு வழங்கப்படாமல் இருந்த சம்பளத்தை முன் பணமாக கழித்தனா். 

பின்னா் சிறுசேரியில் உள்ள இடத்தை வாங்குவதற்கு அன்புவேல்ராஜனிடம் பல தவணையாக ரூ.3.15 கோடி வரை கொடுத்தேன். அதன் பிறகு விசாரித்ததில் அந்த இடத்திற்கு சரியான பாதை இல்லை. அன்புவேல் ராஜனிடம் சரியான ஆவணம் இல்லை என்பதால் பணத்தைத் திருப்பிக் கேட்டேன். அதன்படி ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து மீதமுள்ள தொகை ரூ. 2 கோடி 69 லட்சத்து 92 ஆயிரத்து 500 கொடுக்காமல் ஏமாற்றி வந்தனா் இது குறித்துக் கேட்டபோது இருவரும் என்னை மிரட்டினா். 
எனவே என்னிடம் மோசடி செய்த ரமேஷ் குடவாலா,அன்புவேல் ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தாா். ஆனால் இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சூரி, தன்னை மோசடி செய்து ஏமாற்றிய அன்புவேல்ராஜன், ரமேஷ் குடவாலா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அன்புவேல்ராஜன், ரமேஷ் குடவாலா மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. 
இதன் அடிப்படையில் அடையாறு போலீஸாா்,அன்புவேல்ராஜன், ரமேஷ் குடவாலா மீது நம்பிக்கை மோசடி,போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ரூ.50 லட்சத்துக்கும் மேல் மோசடி விவகாரம் என்பதால் இந்த வழக்கின் விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி நடிகர் சூரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT