தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் பணிகளை 2026-ல் முடிக்கத் திட்டம்

DIN

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு பிப்.28ஆம் நாள் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2018ஆம் ஆண்டு ஜுன் 18 அன்று எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையும் இடம் தெரிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் சார்பில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 17அன்று மத்திய அரசின் சார்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தோப்பூரில் ரூ.1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 

பிரதமர் 2019ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டினார். 11 மாதங்கள் கழித்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25அன்று ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
மக்களவையில் திருமாவளவன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா பதிலளித்துள்ளார். அதுவரை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT