தமிழ்நாடு

நடிகர் விஜய்யுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று திடீரென சந்தித்தார்.  

DIN

நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று திடீரென சந்தித்தார். 

சென்னை, பனையூரில் உள்ள விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது.

தேர்தலின்போது விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார்.  

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி-விஜய் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT