தம்மம்பட்டியில் வாடகை, வரி இனங்கள் நிலுவை தொகை ரூ.40 லட்சம் வசூல்! 
தமிழ்நாடு

தம்மம்பட்டியில் வாடகை, வரி இனங்கள் நிலுவை ரூ.40 லட்சம் வசூல்! வேட்பாளர்கள் செலுத்தினர்!!

தம்மம்பட்டியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 40 லட்சம் வசூலானது.

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 40 லட்சம் வசூலானது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய குத்தகை பணம், குடிநீர் வரி, தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி மற்றும் அவர்கள் பெயரில் வாடகைக்கு எடுத்துள்ள, உள்ளாட்சிக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகத்தின் வாடகைகளை நிலுவையின்றி செலுத்தி, அதற்கான தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே, அவர்களின் வேட்பு மனு ஏற்கப்படும்.

அந்த வகையில், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில், 18 வார்டுகளில் போட்டியிட 102 பேர் வேட்பு மனு அளித்துள்ளனர். இதில், பேரூராட்சி வணிக வளாகத்தில் கடைகள் ஏலம் எடுத்துள்ள 2 பேர், இரண்டு ஆண்டு வாடகை நிலுவைத் தொகை ரூ. 35 லட்சம், தவிர மற்ற வேட்பாளர்கள் மூலம் ரூ. 5 லட்சம் என, மொத்தம் ரூ.40 லட்சம், பேரூராட்சிக்கு  வசூலாகி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT