தமிழ்நாடு

தமிழ்நாடு ஆளுநரின் தில்லி பயணம் திடீர் ரத்து

தமிழ்நாடு ஆளுநரின் தில்லி பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN

தமிழ்நாடு ஆளுநரின் தில்லி பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நீட் தோ்வை ரத்து செய்வதற்கான காரணங்கள் தொடா்பான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயா் நிலைக் குழுவை கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஜூலை 14ஆம் தேதி வழங்கியது. 

ஆனால் இந்த மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவுக்கு கடந்த 3ஆம் தேதி மீண்டும் அனுப்பி வைத்தாா். இதைத்தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அதில், பேரவையின் சிறப்புக் கூட்டத்தை பிப். 8-ஆம் தேதி கூட்டி, நீட் விலக்கு சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றவும், அதனை ஆளுநருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என் 3 நாள் பயணமாக இன்று தில்லி செல்லவிருந்தார். ஆனால் தற்போது இந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக நாளை சிறப்புக் கூட்டத்தொடர் கூடும் நிலையில் ஆளுநரின் தில்லி பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரு நாய்களை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை இல்லை: தீர்ப்பு ஒத்திவைப்பு!

குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்..! யுஇஎஃப்ஏ கண்டனம்!

ஏலகிரி மலைமக்களுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

வங்கியில் வேலை வேண்டுமா..?: பரோடா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிகிச்சை, காப்பீடு, வீடு, உணவு... தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்புத் திட்டங்கள்- தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT