கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. 

DIN

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. 

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 16 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விடும் பணியில் ஈடுபட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT