தமிழ்நாடு

சென்னையில் வெகுவாகக் குறைந்த கரோனா: சிகிச்சையில் 10 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,292 ஆகக் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. நேற்று(புதன்கிழமை) புதிதாக 3,971 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 742 பேர். 

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள விவரங்களின்படி, 

சென்னையில் தற்போது 10,292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்றோர் எண்ணிக்கை 12,215 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதுவரை 9,029 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

மொத்த பாதிப்பு 7,44,583 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,25,262 ஆகவும் உள்ளது. 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 1,254 பேரும் தேனாம்பேட்டையில் 1,019 பேரும், அண்ணா நகரில் 938 பேரும் கோடம்பாக்கத்தில் 933 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT