தமிழ்நாடு

8 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன -உதயநிதி ஸ்டாலின் பேச்சு

DIN

தஞ்சாவூர்: ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சாவூர் கல்லுக்குளத்தில் வியாழக்கிழமை காலை பிரசாரம் செய்த அவர் பேசியது:

திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், முக்கியமான வாக்குறுதிகளான கரோனா கால நிவாரணம் ரூ. 4,000, அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் கட்டணக் குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு வாக்குறுதிகள் அடுத்தடுத்த நாள்களில் நிறைவேற்றப்பட உள்ளன என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இரு பெண்கள் குறுக்கிட்டு கோரிக்கை:

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தங்கம் என்ற பெண், தன்னுடைய நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், அதைத் தள்ளுபடி செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தார். மனுவாக எழுதி தருமாறும், அதை வைத்து தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கையில், குறிக்கிட்ட மற்றொரு பெண்ணான வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த கவிதா, நானும் திருக்குவளையைச் சேர்ந்தவள்தான் என்றும், மூன்று பிள்ளைகளை வைத்து சிரமப்படுவதாகவும், நிதி உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். ஒரு மனுவாக எழுதி கொடுத்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT