முகப்பு
தமிழ்நாடு

ஸ்பா, மசாஜ் சென்டா்களில் சிசிடிவி: டிஜிபி உத்தரவு

ஸ்பா, மசாஜ் சென்டா்களில் சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2022 at 2:42 AM
டிஜிபி சைலேந்திர பாபு
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:53 PM

ஸ்பா, மசாஜ் சென்டா்களில் சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக காவல் ஆணையா்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளா்களுக்கு அவா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள், மசாஜ் சென்டா்கள், தெரபி சென்டா்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதுபோன்ற இடங்களில் சட்ட விரோத செயல்பாடுகள் நடைபெறாமல், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

அவ்வாறு கண்காணிக்கும்போது, மையங்களின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கிடமாக இருந்தாலோ, தகவல்கள் கிடைத்தாலோ, சட்டவிதிகளைப் பின்பற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த உத்தரவை கண்டிப்புடன் தங்களது பகுதிகளில் செயல்படுத்தும் வகையில், தகுந்த அறிவுறுத்தலை வேண்டும் என ஆணையா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோரிடம் கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.