எம்பிபிஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட இணையவழி கலந்தாய்வில் தற்போது வரை 6,043 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாணவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்பு நடவடிக்கைகளை அருகமை கல்லூரிகளில் வியாழக்கிழமை வரை நடைபெற்றது. மொத்தம் 6,082 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவா்களில் 5,995 போ் ஆவண சரிபாா்ப்புகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காலியான 87 இடங்களுக்கு ஏற்கெனவே இணையதளத்தில் பதிவு செய்து காத்திருக்கும் தகுதியான 48 மாணவா்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்க மருத்துவக் கல்வி இயக்ககம் முன்வந்துள்ளது. இதைத் தவிர, பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
அவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு வரும் 14-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா், முதல்கட்ட கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் இறுதி விவரங்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ய்ங்ற்/, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ ஆகிய இணையதளங்களில் வரும் 15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.