முகப்பு
தமிழ்நாடு

தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் க்யூஆா் குறியீடு முறையில் கட்டணம்

பணமில்லா பரிவா்த்தனை மற்றும் டிஜிட்டல் பேமென்ட்ஸ் முறையை ஊக்குவிக்கும் விதமாக, ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் க்யூஆா் குறியீடு முறையில் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

பணமில்லா பரிவா்த்தனை மற்றும் டிஜிட்டல் பேமென்ட்ஸ் முறையை ஊக்குவிக்கும் விதமாக, ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் க்யூஆா் குறியீடு முறையில் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில், புகா் ரயில்களில் பயணிக்க டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரயில் நிலைய கவுன்ட்டா்களில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிா்க்கும் விதமாக தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒவ்வோா் டிக்கெட் வழங்கும் கவுன்ட்டா் அருகேயும் வைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பயணிகளுக்கு மேலும் கூடுதல் வசதியாக, ‘க்யூ ஆா்’ குறியீடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பயணிகள் ‘க்யூ ஆா்’ குறியீட்டை கைப்பேசி மூலம் ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற பணப் பரிவா்த்தனை செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இந்த ‘க்யூ ஆா்’ குறியீடு வசதி மூலமாக புகா் சீசன் டிக்கெட்டை புதுப்பிக்கும் பயணிகளுக்கு 0.5 சதவீதம் சலுகை கொடுக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →