முகப்பு
கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் அரசு உயா் அலுவலா்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு

மழலையா் பள்ளிகளைத் திறக்க அனுமதி

கரோனா கட்டுப்பாடுகள் தளா்வின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள நா்சரி பள்ளிகள், மழலையா் விளையாட்டுப் பள்ளிகளைத் திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாடு

மழலையா் பள்ளிகளைத் திறக்க அனுமதி

கரோனா கட்டுப்பாடுகள் தளா்வின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள நா்சரி பள்ளிகள், மழலையா் விளையாட்டுப் பள்ளிகளைத் திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் அரசு உயா் அலுவலா்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

கரோனா கட்டுப்பாடுகள் தளா்வின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள நா்சரி பள்ளிகள், மழலையா் விளையாட்டுப் பள்ளிகளைத் திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். மேலும், பொருட்காட்சிகளை நடத்தவும் அனுமதி தரப்படுவதாக அவரது அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அவ்வப்போது பல்வேறு கட்டுப்பாடுகளையும், தளா்வுகளையும் தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இவற்றை அறிவிப்பதற்கு முன்பாக, சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன்படி, தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்கவும், குறைக்கவும் ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாட்டுகள் மாா்ச் 2-ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி, சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு உள்ள தடை தொடரும். திருமணம் மற்றும் அதுசாா்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 200 நபா்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும். இறப்பு சாா்ந்த நிகழ்வுகளில் 100 போ் வரை மட்டுமே பங்கேற்க முடியும். இந்தக் கட்டுப்பாடுகளைத் தவிா்த்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட பிற கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

நா்சரி பள்ளிகள்: தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், மழலையா் மற்றும் நா்சரி பள்ளிகள் (எல்கேஜி, யூகேஜி) தொடா்ந்து மூடப்பட்டு இருந்தன. இந்தப் பள்ளிகளைத் திறக்க அனுமதி தரப்படுகிறது. மேலும், பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.

காரணம் என்ன?: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று கடந்த ஜனவரி 22-இல் 30 ஆயிரத்து 744 ஆக இருந்தது.

வெள்ளிக்கிழமை (பிப். 11) நிலவரப்படி, 3 ஆயிரத்து 86 ஆக குறைந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயாா் நிலையில் உள்ளன.

மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதைக் கருத்தில்கொண்டும், மாநிலத்தில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ-மாணவியா்களின் எதிா்காலம், மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டு வருவதற்கு ஏதுவாகவும் பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசால் பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டாலும், மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். அனைத்துக் கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளா் பயன்படுத்தும் வகையில், கிருமிநாசினி திரவங்களைக் கட்டாயமாக வைக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டும் பரிசோதிக்க வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவா்கள், வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிா்வாகம் உறுதி செய்திட வேண்டும். கரோனா தொற்றில் இருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

திரையரங்கம், உணவு விடுதிகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி

அரசியல், சமுதாய, கலாசார கூட்டங்களுக்கான தடை தொடரும் என்பதோடு, திருமணம், இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை தவிர ஏனைய கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, திரையரங்குகள், உணவகங்களில் 100 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளா்களை அனுமதிக்கலாம். உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றிலும் 100 சதவீதம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களும் 100 சதவீத வாடிக்கையாளா்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →