தமிழ்நாடு

100 நாள் வேலை: மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர். 

மானாமதுரை ஒன்றியத்தைச் சேர்ந்த ஆவரங்காடு   கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டம் முறையாக பயனாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் இந்த வேலைக்கு வரும் பயனாளிகளை காலையில் வழக்கமாக பணிக்கு வரும் நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டுமென வற்புறுத்துவதாகவும் புகார் கூறி ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அதன் பின் இவர்கள்  வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்னர் இந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT