முகப்பு
தமிழ்நாடு

கன்னியாகுமரி உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
பகிர்:

கன்னியாகுமரி, நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

15.02.2022, 16.02.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

17.02.2022, 19.02.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்)

தொண்டி (ராமநாதபுரம்), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 1 

முழு கட்டுரையைப் படிக்க →