தமிழ்நாடு

நியூட்ரினோ தடை: முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறேன்; வைகோ

DIN

தமிழக அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததற்கு முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். 

தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நியூட்ரினோவை விட மேற்குத் தொடர்ச்சி மலைகளே முக்கியம் எனவும் அதனால் அத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு பதில் மனு அளித்தது.

தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டிற்காக பலரும் பாராட்டி வரும் வேளையில் வைகோ ‘ தமிழ்நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் அளிப்பது இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகின்றேன்’ என அறிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT