மயிலாப்பூரில் வாக்குப்பதிவு செய்தார் திமுக எம்.பி. கனிமொழி
மயிலாப்பூர் இராதாகிருஷ்ணன் சி.எஸ்.ஐ செயின்ட் எப்பாஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திமுக எம்.பி. கனிமொழி தனது வாக்கினை பதிவு செய்தார்.
தமிழ்நாடுமயிலாப்பூரில் வாக்குப்பதிவு செய்தார் திமுக எம்.பி. கனிமொழி
மயிலாப்பூர் இராதாகிருஷ்ணன் சி.எஸ்.ஐ செயின்ட் எப்பாஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திமுக எம்.பி. கனிமொழி தனது வாக்கினை பதிவு செய்தார்.
மயிலாப்பூர் இராதாகிருஷ்ணன் சி.எஸ்.ஐ செயின்ட் எப்பாஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திமுக எம்.பி. கனிமொழி தனது வாக்கினை பதிவு செய்தார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை முதல் மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திரை பிரபலங்கள், பிரபலங்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அந்தந்த மாவட்டங்களில் வாக்களித்து வருகின்றனர்.
இதையும் படிக்க- செங்கல்பட்டில் வாக்களிக்க வந்த முதியோர்
இந்த நிலையில், திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி தனது தாயார் ராசாத்தி அம்மாளுடன், சென்னை, மயிலாப்பூர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ செயின்ட் எப்பாஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.