எல். முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை; அவர் வந்து வாக்களிக்கலாம்; ஆணையர் 
தமிழ்நாடு

எல். முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை; அவர் வந்து வாக்களிக்கலாம்: ஆணையர்

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை. அவர் வந்து வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

DIN


சென்னை: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை. அவர் வந்து வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எல். முருகன் வாக்கினை வேறு ஒருவர் செலுத்திவிட்டதாகக் கூறி புகார் எழுந்தது. 

இது குறித்து மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலையும் தனது சுட்டுரையில், மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. 

இதையும் படிக்க.. புதிதாகப் போட்ட தார்ச் சாலையில் புல் முளைக்குமா?

மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா? என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச்சாவடியில் ஆய்வு செய்து, எல். முருகன் வாக்கை யாரும் செலுத்தவில்லை. அவர் வந்து வாக்களிக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி 101-வது வார்டில் தனது வாக்கினை எல்.முருகன் செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT