தமிழ்நாடு

குடியரசு நாள் அலங்கார ஊர்திகள்: மெரீனாவில் பிப்.22 வரை பார்வையிடலாம்

DIN

குடியரசு நாள் அலங்கார ஊர்திகள் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை மெரீனாவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரிதாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

படித்த மேதைகள் வாக்களிக்க வரவேண்டும். சென்னையில் வாக்கு எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு வெறுப்பு காரணம் அல்ல, நிறைய மக்கள் நேற்று சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அதனால்தான் வாக்கு எண்ணிக்கை குறைந்துள்ளது.

மேலும் பேசிய அவர், குடியரசு தின அலங்கார ஊர்திகள் இன்று முதல் 22ஆம் தேதி வரை மெரீனாவில் வைக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் சென்று வந்த அலங்கார ஊர்திகள் மெரீனாவில் 3 இடங்களில் வைக்கப்படவுள்ளது. அதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என்று கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில் மிக குறைந்த அளவாக சென்னையில் 43.59 சதவிகித வாக்குகள் பதிவாகியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT