கோவை வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக, பாஜக தர்னா
கோவை வாக்கு எண்ணும் மையத்தில் தொடக்கம் முதலே திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தனர்.
தமிழ்நாடுகோவை வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக, பாஜக தர்னா
கோவை வாக்கு எண்ணும் மையத்தில் தொடக்கம் முதலே திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தனர்.
கோவை வாக்கு எண்ணும் மையத்தில் தொடக்கம் முதலே திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தனர்.
11.30 மணி நிலவரப்படி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் 17 பேரின் வெற்றி உறுதியான நிலையில் 32ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் முருகபாபு, பாஜக வேட்பாளர் புவனேஷ்வரன் ஆகியோர் தங்கள் முகவர்களுடன் வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதில் 32ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது, வாக்கு இயந்திரங்களை திமுகவினர் மாற்றிவிட்டதாகக் கூறி கோஷமிட்டனர். காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி வெளியேற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.