முகப்பு
தமிழ்நாடு

வாழப்பாடி பேரூராட்சியை திமுக கைப்பற்றுகிறது?

சேலம் மாவட்டம் வாழப்பாடி தேர்வுநிலை பேரூராட்யில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக-7, அதிமுக–5, பாமக–2, சுயேட்சை–1 ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி தேர்வுநிலை பேரூராட்யில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக-7, அதிமுக–5, பாமக–2, சுயேட்சை–1 ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

1வது வார்டு சி.பெரியம்மாள் (அதிமுக), 2வது வார்டு ர.ரஞ்சித்குமார் (திமுக), 3வது வார்டு செ.லட்சுமி (பாமக),4வது வார்டு ம.புவனேஸ்வரி (அதிமுக), 5வது வார்டு நா.சிவக்குமார் (அதிமுக), 6வது வார்டு க.குமார் (திமுக), 7 வது வார்டு ச.கவிதா  (திமுக), 8வது வார்டு த.பழனிசாமி (சுயேட்சை), 9வது வார்டு அ.சரஸ்வதி (அதிமுக), 10 வது வார்டு வெ.வசந்தி (அதிமுக), 11வது சு.சத்தியா (திமுக), 12 வது வார்டு ச.சாந்தாகுமாரி (திமுக), 13 வது வார்டு மு.மாதேஸ்வரி (திமுக), 14வது வார்டு ம.வெங்கடேஷ்வரன் (பாமக). 15 வது வார்டு மா.ராணி (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7 வார்டுகளை கைப்பற்றியுள்ளதால், சுயேட்சை மற்றும் பாமக ஆதரவோடு, வாழப்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை கைப்பற்ற திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். திமுக ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தியின் மனைவி, ச.கவிதா திமுக சார்பில், பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.