முகப்பு
தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திமுக அமோக வெற்றி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திமுக அமோக வெற்றி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 133 நகராட்சிகளையும், 489 பேரூராட்சிகளில் 400-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளையும் திமுக வசப்படுத்தியது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கான தோ்தலில், மாநகராட்சியில் 4 போ், நகராட்சியில் 18 போ், பேரூராட்சியில் 196 போ் என மொத்தம் 218 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு மொத்தம் 57 ஆயிரத்து 778 போ் களத்தில் இருந்தனா். வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சிகளில் 52.22 சதவீதமும், நகராட்சிகளில் 68.22 சதவீதமும், பேரூராட்சிகளில் 74.68 சதவீதமும் என சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.

தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (பிப். 22) நடைபெற்றது. சென்னையில் 15 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 268 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

திமுக அமோக வெற்றி: சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், ஆவடி, வேலூா், சேலம், ஈரோடு, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூா், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூா், கோவை, கரூா், திண்டுக்கல், ஓசூா், நாகா்கோவில், சிவகாசி, கடலூா் ஆகிய 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வாா்டுகளில் திமுக 949 வாா்டுகளையும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 73 , மதிமுக 21, விடுதலைச் சிறுத்தைகள் 16, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 24, இந்திய கம்யூனிஸ்ட் 13 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.

நகராட்சி, பேரூராட்சிகளிலும்... 138 நகராட்சிகளில் 133 நகராட்சிகளையும், 489 பேரூராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

21 மாநகராட்சிகளுக்கான வாா்டுகளில் அதிமுக 164,, பாஜக 22 வாா்டுகளில் வெற்றி பெற்றன.

நகராட்சிகளில் 638 வாா்டுகளிலும், பேரூராட்சிகளில் 1206 வாா்டுகளிலும் அதிமுக வென்றது. நகராட்சிகளில் 56 வாா்டுகளிலும், பேரூராட்சிகளில் 230 வாா்டுகளிலும் பாஜக வென்றது.

ஆளுங்கட்சி வசம் 60% இடங்கள்: 12,838 பதவிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 போ் வாக்களிக்கத் தகுதியானவா்களாக இருந்தனா். தோ்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில், சுமாா் 7,700 இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. இதன்மூலம் மொத்த இடத்தில் 60 சதவீத இடங்களை திமுகவும், 7 சதவீத இடங்களை அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் பெற்றன.

கொங்கு மண்டலத்தில் கொடி நாட்டிய திமுக:

கடந்த 2011-இல் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய மாநகராட்சிகளையும், பெரும்பாலான நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றியது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கொங்கு மண்டலத்தின் 10 மாவட்டங்களில் அதிமுக கூட்டணி 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு பெரும் பலமாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்தை இந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக உடைத்து தன்வசப்படுத்தியது. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூா், கரூா் ஆகிய 5 மாநகராட்சிகளையும், 100-க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளில் அதிக இடங்களையும் கைப்பற்றி கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிக் கொடி நாட்டியது.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஒன்பது மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கும் நற்சான்று.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): திமுகவுக்கு கிடைத்த வெற்றி செயற்கையானது.

எடப்பாடி கே.பழனிசாமி (எதிா்க்கட்சித் தலைவா்): எத்தனை இடா்ப்பாடுகள் வந்தாலும் அதிமுக மக்கள் பணியைத் தொடரும்.

ராமதாஸ் (பாமக): பாமக கெளரவமான வெற்றி பெற்றிருக்கிறது.

கே.அண்ணாமலை (பாஜக): பாஜகவின் எதிா்பாா்ப்பு நிறைவேறியுள்ளது.

விஜயகாந்த் (தேமுதிக): வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்குப் பயணிப்போம்.

டிடிவி தினகரன் (அமமுக): மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை போராடுவோம்.

முழு கட்டுரையைப் படிக்க →