கூடலூரில் குடும்பத்தகராறு: கணவன், மனைவி தற்கொலை
தேனி மாவட்டம் கூடலூரில் குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தேனி மாவட்டம் கூடலூர் நோட்டக்கார புளியமரத்து தெருவை சேர்ந்தவர் குபேந்திரன்(60), விவசாயி, இவரது மனைவி சுந்தரி (55). இவர்களுக்கு திருமணமாகி தினேஷ், தியாகு என்ற 2 மகன்கள் தனியாக வசித்து வருகின்றனர்.
குபேந்திரன் அவர் மனைவியும் தனியாக வசித்து வந்தனர், மகன்கள் தனியாக வசித்ததாலும், தம்பதி போதிய வருமானம் இன்றியும் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அருகே உள்ளவர்கள் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் மயங்கி கிடந்தனர். இருவரையும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் குபேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர், சிறிது நேரம் கழித்து சிகிச்சை பலனின்றி சுந்தரியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததும் கூடலூர் வடக்கு காவல் நிலைய காவலர்கள் கணவன், மனைவி இருவரது உடல்களை கம்பம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்கு ஒப்படைத்து மேல் விசாரணை செய்து வருகிறார்கள்.
கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.