முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 700க்கு கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 671 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று 8 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 22 பிப்ரவரி, 2022 at 9:19 PM
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 671 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று 8 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று 788 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதில், இன்று 61,469 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், புதிதாக 671 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,46,388-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதால் மொத்த உயிரிழப்பு 37,989 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 2,375 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 33,96,078-ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை மொத்தமாக 6,40,22,749 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 169 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.