மன்னார்குடி நகராட்சி 23வது வார்டில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கே. சென்னுகிருஷ்ணனிடம் பெறும் அமமுக வேட்பாளர் ஆ .செந்தில் செல்வி 
தமிழ்நாடு

மன்னார்குடி நகராட்சித் தேர்தலில் சகோதரர்களின் மனைவிகள் வெற்றி

மன்னார்குடி நகராட்சியில் 33 வார்டுகளில் திமுக 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

DIN

மன்னார்குடி நகராட்சியில் 33 வார்டுகளில் திமுக 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட 33 வார்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், திமுக - 26, அதிமுக - 4, அமமுக -1, சுயேச்சை -1 என வெற்றி பெற்று நகராட்சி திமுக வசமானது.

அமமுக சார்பில் 23வது வார்டில் போட்டியிட்ட அமமுக நகரச் செயலர் ஆ.ஆனந்தராஜ் மனைவி  செந்தில் செல்வி 575 வாக்குகள் பெற்று   திமுக வேட்பாளரைவிட 183 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மன்னார்குடி நகராட்சி 33 வது வார்டில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கே. சென்னுகிருஷ்ணனிடம் பெறும் அமமுக வேட்பாளர் அ.திருச் செல்வி.

இதேபோன்று ஆனந்த ராஜ் சகோதரர் அமமுக ஜெ.பேரவை மாவட்ட துணைச் செயலர் ஆ.அமிர்தராஜ் மனைவி திருச்செல்வி 33வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்டு 1019 வாக்கு பெற்று திமுக வேட்பாளரைவிட 490 வாக்கு கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களின் மனைவிகள் ஒரே கட்சியில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடியோ ஒளிப்பதிவு பயிற்சிபெற எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு அழைப்பு

ஆக.28-ல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பங்குச்சந்தையில் நஷ்டம்: முதலீட்டாளா் தற்கொலை

ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யை கடித்து குதறிய தெருநாய்

SCROLL FOR NEXT