புவனகிரி பேரூராட்சி: ஒரு வார்டில் மறுவாக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் ஒரு வார்டில் வாக்கு இயந்திரம் பழுதானதால் வரும் 24-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடுபுவனகிரி பேரூராட்சி: ஒரு வார்டில் மறுவாக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் ஒரு வார்டில் வாக்கு இயந்திரம் பழுதானதால் வரும் 24-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் ஒரு வார்டில் வாக்கு இயந்திரம் பழுதானதால் வரும் 24-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
இதனிடையே, கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியிலுள்ள ஒரு வார்டில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு இயந்திரம் பழுதானது. இதனால், அந்த ஒரு வார்டுக்கு மட்டும் வாக்குச் சாவடி எண் 4 AV-இல் வரும் 24-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.