சேலம்: வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிந்த அரசியல் கட்சியினர்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடுசேலம்: வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிந்த அரசியல் கட்சியினர்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சேலம் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை காலை முதலே, பல்வேறு கட்சி முகவர்கள் திரண்டிருந்தனர்.
சேலம் அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தபால் ஓட்டு எண்ணுவதற்காக பெட்டியை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ளே செல்லும் பல்வேறு கட்சி முகவர்களிடம் தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் கொண்டு செல்கிறார்களா என்று சோதனை செய்து காவலர்கள் அனுப்பினர்.