தமிழ்நாடு

நகர்ப்புற தேர்தல் வெற்றி: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணா நினைவிடத்தில் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன.

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பான்மையான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மெரினாவில் அமைந்திருக்கும் கருணாநிதி, அண்ணா நினைவிடத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

உடன், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன், எம்.எல்.ஏ. உதயநிதி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT