திருச்சி: பொன்னம்பட்டி பேரூராட்சியில் சுயேச்சை முன்னிலை 
தமிழ்நாடு

திருச்சி: பொன்னம்பட்டி பேரூராட்சியில் சுயேச்சை முன்னிலை

திருச்சி அருகே உள்ள பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியை நிர்ணயிக்கும் வகையில் சுயேச்சைகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

திருச்சி அருகே உள்ள பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியை நிர்ணயிக்கும் வகையில் சுயேச்சைகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம்  பொன்னம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினருக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை திருச்சி காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி இன்று நடைபெற்றது. 

இதில்  6 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும், 4 இடங்களில் திமுக வேட்பாளர்கள், 2 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடம் என வெற்றி பெற்றுள்ளது. 

இதனால் பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியை நினைக்கும் இடத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT