நகர்ப்புற தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த துரைமுருகன்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடுநகர்ப்புற தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த துரைமுருகன்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று வரும் நிலையில், கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன.
காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பான்மையான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க | உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்..உடனுக்குடன்
இந்நிலையில், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்த துரைமுருகன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராஜா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இருந்தனர்.