குரூப் 2, 2ஏ தோ்வு அறிவிக்கை வெளியீடு: முழு விவரம் 
தமிழ்நாடு

குரூப் 2, 2ஏ தோ்வு அறிவிக்கை வெளியீடு: முழு விவரம்

குரூப் 2 தோ்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

DIN

குரூப் 2, 2 ஏ தோ்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களைக் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை இன்று டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பினை கடந்த வாரம் வெளியிட்ட அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் தேர்வு குறித்த அறிவிக்கை இன்று வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -2 (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 2022, மார்ச் 23ஆம் தேதி வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 5,143 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது.

பிப்ரவரி 23ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் - 2022, மார்ச் 23. 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் - 2022, மே 21ஆம்  தேதி. முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.

முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்.. முதல்நிலை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT