முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 500ஆக குறைந்த தினசரி பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 507 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 507 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

அதில், அதிகபட்சமாக சென்னையில் 133 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 76 பேரும், செங்கல்பட்டில் 58 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 1,794 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 01,938-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 8,150 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 3 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,000-ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →