முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு
பகிர்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி பெருவாரியான இடங்களை வென்றுள்ளது. ஆளும் திமுகவின் இந்த வெற்றியானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த அதிமுகவின் இடங்களை கைப்பற்றியுள்ளது திமுகவினருக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.