தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 439 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 439 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் புதிதாக 439 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 60,707 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 439 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதில், அதிகபட்சமாக சென்னையில் 119 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 66 பேரும், செங்கல்பட்டில் 51 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,49,007ஆக உயர்ந்துள்ளது. 

மற்றொருபுறம் மேலும் 1,209 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.  இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 04,611-ஆக அதிகரித்துள்ளது. 

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 6,393 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 1 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,003-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT