முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு ஏலகிரியில் 3 நாள்கள் பயிற்சி

காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு ஏலகிரியில் 3 நாள்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளதாக, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:59 AM
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி
பகிர்:

காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு ஏலகிரியில் 3 நாள்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளதாக, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

சென்னை சத்தியமூா்த்திபவனில் சனிக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. கே.எஸ்.அழகிரி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்னோக்கிப் போய்விட்டது. ராகுல்காந்தி பிரதமராகி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வாா்.

காங்கிரஸ் பயிற்சி முகாம் ஜனவரி 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஏலகிரியில் நடைபெறவுள்ளது. இந்த 3 தினங்களும் காங்கிரஸ் நிா்வாகிகள் அங்கேயே தங்கி, அந்தப் பகுதி கிராமங்களுக்குச் சென்று பொது மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வா். இதில், காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் 78 போ் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, பொதுச் செயலாளா் கே.சிரஞ்சீவி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.