தமிழ்நாடு

17வது கரோனா தடுப்பூசி முகாம்: 15.16 லட்சம் பேர் பயன்

DIN

தமிழகம் முழுவதும இன்று நடைபெற்ற 17வது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15,16,804 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, வார இறுதி நாள்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 17வது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இம்முகாம்களில் 15,16,804 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
இதில் முதல் தவணையாக 4,20,098 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 10,96,706 பயனாளிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 86.95% முதல் தவணையாகவும் 60.71% இரண்டாம் தவணையாகவும் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. 
இதுவரை நடைபெற்ற 16 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 3 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT