தமிழ்நாடு

தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் மூடல்: மா. சுப்பிரமணியன்

DIN


சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சென்னை, பெரியார் திடலில் கரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ சிறப்பு மையத்தைத் திறந்து வைத்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டன.

அம்மா மினி கிளினிக்குகள் என்பது தற்காலிக அமைப்புதான்.  அம்மா மினி கிளினிக்குகளில் போதிய செவிலியர் இல்லாமல் செயல்படாமலேயே இருந்தது. மினி கிளினிக்குகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படாததால், சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தது. அம்மா மினி கிளினிக் திட்டம் என்பது தற்காலிகமானது. அத்திட்டம் முடிந்துவிட்டது. ஓராண்டு அடிப்படையில்,  மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. மினி கிளினிக்குகளில் பணியமர்த்தப்பட்ட 1820 மருத்துவர்களும் மற்றப் பணிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT