தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளா? முதல்வர் ஆலோசனை

DIN

தமிழகத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி புதிய கரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தொடர்ந்து தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், பொங்கல் பண்டிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

சூர்யா படத்தில் ஜோஜு ஜார்ஜ்!

SCROLL FOR NEXT