மதுரை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் புதன்கிழமை வெளியிட்டார். 
தமிழ்நாடு

மதுரை மாவட்டத்தில் 27.13 லட்சம் வாக்காளர்கள்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 27 லட்சத்து 13 ஆயிரத்து 33 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 27 லட்சத்து 13 ஆயிரத்து 33 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மதுரை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் புதன்கிழமை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்ளிடம் அவர் கூறியது: 

மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 27 லட்சத்து 13 ஆயிரத்து 33 வாக்காளர்கள் இடம் பெற்றுளளனர். இவர்களில் 13,31,825 பேர் ஆண்கள்.13,81,007 பேர் பெண்கள்.  201 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின் போது10,768 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர், 42,074 பேர்  பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர், 

மதுரை மாவட்டத்தில் உள்ள 10  தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக மதுரை கிழக்கு தொகுதி உள்ளது.

இத்தொகுதியில் 3,31,829 வாக்காளர்கள் உள்ளனர், குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழவந்தான் தொகுதி உள்ளது, இத்தொகுதியில் 2,19,194 வாக்காளர்கள் உள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

டைல்ஸ் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

முன்னாள் ஊராட்சித் தலைவா் தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 7 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT