தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 4,862 பேருக்கு கரோனா: சென்னையில் 2 ஆயிரத்தைத் தாண்டியது

DIN


தமிழகத்தில் புதிதாக 4,862 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 4,862 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்தவர்கள் 6 பேர். இலங்கையிலிருந்து வந்தவர்கள் இருவர். கானாவிலிருந்து வந்தவர் ஒருவர். 

இதுதவிர மேற்கு வங்கத்திலிருந்து வந்தவர்கள் 19 பேர், பிகாரிலிருந்து வந்தவர்கள் 4 பேர். ஆந்திரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் தலா ஒருவர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,60,449 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 688 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 27,07,058 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,814 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்கள்:

சென்னையில் அதிகபட்சமாக 2,481 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • செங்கல்பட்டு - 596
  • கோவை - 259
  • காஞ்சிபுரம் - 127
  • திருவள்ளூர் - 209
  • தூத்துக்குடி - 123
  • வேலூர் - 184

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT