ஜன. 20 கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம்: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக, கல்லூரிகளில் ஜனவரி 20ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.