தமிழ்நாடு

இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கில் போலீசாருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

DIN

இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கில் போலீசார் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வியாழக்கிழமை (ஜன. 6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை வெளியிட்டாா். இந்த நிலையில், இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கில் போலீசார் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டு தடை செய்யக்கூடாது.
அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காண்பித்தால் அனுமதிக்க வேண்டும்.
அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடிந்து திரும்புவோரை அனுமதிக்க வேண்டும்.
ஊரடங்கு வாகனச்சோதனையின்போது கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
பத்திரிகை, மருத்துவம், பால், மின்சாரம், சரக்கு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT