தமிழ்நாடு

முழு ஊரடங்கு: சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் குப்பைகளை அகற்றும் துப்பரவு பணிகளில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். 

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி நிர்வாகம் சாக்கடைகளை தூர்வாருதல், கொசு மருந்து அடித்தல், குப்பைகளை அகற்றும்  பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனையடுத்து தமிழகரசு பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை (இன்று) முழு ஊரடங்கு அறிவிப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை (இன்று) பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் உள்ளடங்கி இருப்பதையடுத்து  தெருக்கள், வீடுகளில் குப்பைகளை தேங்காமல் இருப்பதற்காக பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வார்டு பகுதிகளில் தள்ளு வண்டிகளிலும், சாலைகளில் பெரிய வாகனங்களிலும் குப்பைகளை அகற்றி, பிளீச்சிங் பவுடர்களை தெளித்து நகரை தூய்மை படுத்தி வருகின்றனர். முழு ஊரடங்கு காலத்தில்  தூய்மை பணியாளர்களின் பணிகளை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT