நீர் திருட்டில் ஈடுபடுவோருக்கு விவசாயக் கடன் வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்
நீர் திருட்டில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர் திருட்டில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரம்பிக்குளம் - ஆழியார் திட்டக் கால்வாயிலிருந்து நீர் எடுக்க அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கும் விவசாயிகளுக்கு விவசாயக் கடன்களை வழங்கக்கூடாது எனவும் திருட்டில் ஈடுபடுவோர் மற்றும் அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை தேவை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் , மானிய விலையில் உரம், விதை வாங்க முடியாத வகையில் அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க | ஜல்லிக்கட்டு: 300 வீரர்கள்; 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி