தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் டிச.31 உடன் முடிவு

DIN

அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலமும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை குறைக்கும் மசோதா சட்டமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை கணக்கிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டுறவு சங்கத்துக்கான தலைவர், துணைத் தலைவர், இயக்குநர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது.

கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் அதிகளவிலான நிதி முறைகேடுகளும், போலி நகைகள் மீதான கடன்கள் மற்றும் போலி கடன்கள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனால், கூட்டுறவு சங்கங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அதன் நிர்வாகங்களை நெறிப்படுத்தவும், முறையாக நிர்வகிக்கவும், கூட்டுறவு சங்க செயல்பாடு திறனை அதிகரிக்கவும், கூட்டுறவு சங்கங்களின் இயக்குனர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் வகையிலான சட்டத்தை தமிழக அரசு கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: நோயாளி கருகிப் பலி!

SCROLL FOR NEXT