சரியத் தொடங்கியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்த காரணத்தால் கடந்த 31ஆம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாகக் குறைக்கப்பட்டு இருந்தது
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்த காரணத்தால் கடந்த 31ஆம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாகக் குறைக்கப்பட்டு இருந்தது.
தற்பொழுது டெல்டா பாசன பகுதிகளில் மழை இல்லாததால் பாசன தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை முதல் வினாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. இனி தமிழில் தேர்வு நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரியத் தொடங்கியது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.59 அடியிலிருந்து 116.21 அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2390 கன அடியிலிருந்து 2060 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 87.55 டி.எம்.சி.யாக இருந்தது.