தமிழ்நாடு

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு திமுக அரசு சொந்தம் கொண்டாடுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

DIN

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளை திமுக அரசு கொண்டு வந்ததுபோல, சொந்தம் கொண்டாடுவதாகக் கூறி எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று கட்டடம் கட்டுவதற்கான நிதியையும் ஒதுக்கியது.

விருதுநகா், நாமக்கல், நீலகிரி, திருப்பூா், திருவள்ளூா், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூா், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களுக்கு நானும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், சில மாவட்டங்களுக்கு மற்ற அமைச்சா்களும் நேரடியாகச் சென்று மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டோம்.

11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதன் மூலம் 1,450 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஏற்கெனவே அரசுப் பள்ளி மாணவா்களுக்காக அதிமுக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக, சுமாா் 109 ஏழை, எளிய, கிராமப்புற மாணவா்களின் மருத்துவக் கனவு நிறைவேறவுள்ளது.

இந்த மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக பிரதமா் புதன்கிழமை திறந்து வைக்கவுள்ளாா். ஆனால், இந்த மருத்துவக் கல்லூரிகளை திமுக அரசுதான் கொண்டு வந்ததுபோல காட்ட முயற்சிக்கிறது. இதைக் கண்டிக்கிறேன்.

இனியாவது திமுக அரசு அடுத்தவா்கள் பெற்றெடுத்த குழந்தைக்குச் சொந்தம் கொண்டாடாமல் இருக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT