தமிழ்நாடு

போகிப் பண்டிகை: சென்னையை சூழ்ந்த புகை மூட்டம்

DIN

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்து கொண்டது.

சென்னை புஷ்பா நகரில் போகி கொண்டாட்டம்

இதையும் படிக்க.. பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே எச்சரிக்கை

அதிகாலை முதலே பொதுமக்கள் பலரும் தங்கள் வீட்டு வாயிலில், பழைய பொருள்களை போகியிலிட்டு எரிக்கத் தொடங்கினர். சிறார்கள் பலரும் மேளத்தை இசைத்து, பாடல்கள் பாடி போகிப் பண்டிகையை வெகு உற்சாகமாகக் கொண்டாடினர்.

சென்னை சாலைகளில் சூழ்ந்த புகைமூட்டம் - நெல்சன் மாணிக்கம் சாலை.

போகிப் பண்டிகையின்போது ஏராளமானோர் போகி கொளுத்துவதால், புகை சூழ்ந்து கொண்டது. ஏற்கனவே பனி மூட்டம் இருந்த நிலையில், அதனுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டது.

போகி புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மிகவும் தாமதமாக சென்றன - ஆவடி பகுதி

காலையில் கடுமையான புகைமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT